இன்று வயது வேறுபாடு இன்றி அனைவரையும் ஆட்டிப்படைக்கும் சமூகவலைத்தளமாக பேஸ்புக் விளங்குகிறது.
இதனால் பல நன்மைகள் காணப்படுகின்ற போதிலும் சில சந்தர்ப்பங்களில் சங்கடங்களும் உருவாகுவது உண்டு. அதே போல தற்பொழுது பெரியதொரு சங்கடம் உருவாகி பேஸ்புக் உலகை கலங்கடித்துக் கொண்டிருக்கின்றது.
அதாவது 15 வயதுடைய "கன்னா" எனும் சிறுமி இந்த பேஸ்புக் சமூக வலைத்தளத்திற்கு அடிமையானதை பொறுக்க முடியாத கோபக்கார தந்தை தனது 0.45 மில்லிமீட்டர் கைத்துப்பாக்கியால் மகளின் லேப்ரொப்பை சுட்டுத்தள்ளியுள்ளார்.அத்துடன் ஆறிவிடாத அவரது கோபம் அச்செயற்பாட்டை வீடியோ எடுத்து தனது மகளின் பேஸ்புக் பக்கத்திலேயே பதிவேற்றம் செய்தும் இருக்கின்றார்.
1 comment
Super
Post a Comment