இதன்படி, பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 13 ரூபாவாலும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எண்ணெய் ஏற்றுமதியில் உலகில் இரண்டாவது இடத்தை வகிக்கும் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைவிதித்துள்ளதன் காரணமாகவே எரிபொருள்களின் விலைகளை உயர்த்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை 70 சதவீதமான மசகு எண்ணெய்யை ஈரானிலிருந்தே இறக்குமதி செய்கின்றது. இதற்கு ஈரான் அரசு மூன்று மாதகால கடன் நிவாரணத்தை இலங்கைக்கு வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் மீளமைப்பு செய்யப்படவுள்ளபோதும் தனியார் பொதுப் போக்குவரத்து மற்றும் மீன்பிடித்துறையினருக்கு விலை நிவாரணம் வழங்கப்படும் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
No comments
Post a Comment