ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு இந்தியாவின் அதி உயர் விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று சிபாரிசு செய்து உள்ளார் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமண்யன் சுவாமி.
இலங்கைக்கு தனிப்பட்ட சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் பாரத ரத்னா விருது மஹிந்தருக்கு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழித்த பெருமைக்கு உரியவர் மஹிந்தர் என்பதால் இவ்விருது வழங்கப்பட வேண்டும் என்று கூறி உள்ளார்.
இவ்விருதை பெற்றவர்களில் இந்தியவர்கள் அல்லாதவர்கள் இருவர். ஒருவர் கான் அப்துல் கப்பார் கான். மற்றவர் நெல்சன் மண்டேலா.
No comments
Post a Comment