அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவை சேர்ந்தவர் ஜோசப் பிரே(47). இவர் தனது மனைவியின் பிறந்த நாளை மறந்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி, பிரேவுடன் கடுமையான வாக்குவாத்தில் ஈடுபட்டார்.
அப்போது மனைவியை தள்ளி விட்டுள்ளார். இந்த பிரச்னை பெரிதானதால், குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் பிரேவை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைந்தனர்.
இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி ஹர்லே விசாரித்தார். அப்போது பிறந்த நாள் மறந்து போனதற்கான சூழ்நிலை குறித்து பிரேவிடம் கேட்டறிந்தார்.
அதன்பின், பிறந்த நாளை மறந்ததால் கணவன்- மனைவிக்குள் வாக்குவாதம் நடந்துள்ளது. அப்போது மனைவியை கோபத்தில் தள்ளிவிட்டுள்ளார் பிரே. ஆனால் அடிக்கவில்லை என்று தெரிகிறது.
மேலும் பிரே மீது எந்த குற்ற வழக்கும் இல்லை. இவற்றை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டது. எனவே மனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்து அட்டை, பூக்களை வாங்கிக் கொண்டு இரவு உணவு சாப்பிட ஹோட்டலுக்கு அவரை அழைத்து செல்ல வேண்டும்.
மேலும் இருவரும் திருமண கவுன்சலிங் அளிப்பவரை உடனடியாக சந்தித்து ஆலோசனை பெற வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். விசாரணையின் போது, கணவனை பார்த்து எனக்கு பயமில்லை என்று மனைவியும் நீதிபதியிடம் கூறினார். இதையடுத்து பிரேவை சிறையில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டார்.
2 comments
Eppadi ellaam case podalaamnu room pottu utkaarndhu yosippangalo???? Kodumaida saami.
//
Srividyamohan எப்படி எல்லாம் கேஸ் போடலாம்னு..
//
அடிக்கக்கூடும் என்ற பயத்தில் அவசர உதவிக்கு அழைக்கப்பட்டதால், காவலர்கள் கணவனை கைது செய்திருக்கிறார்கள். அவருக்கு அன்பர் தினத்தை அனுசரித்து நல்ல தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள். இதில் எதுவும் கொடுமை இல்லையே.
Post a Comment