Latest News

February 12, 2012

சேவல் முட்டை
by admin - 0


சீனாவிலுள்ள சேவலொன்று முட்டையிடுவது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் மூழ்கவைத்துள்ளது. இதற்கான காரணம் என்னவென்று அறிய தற்போது அவர்கள் ஆய்வுகளைத் தொடங்கியுள்ளனர்.

சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் உள்ள சுமியோ கிராமத்தில் வசிக்கும் ஹுவாங் லீ (வயது 47) என்பவர் வளர்த்துவந்த சேவலே இவ்வாறு முட்டையிடத் தொடங்கியுள்ளது




இவர் தனது கோழிப் பண்ணையில் 7 கோழிகளையும் ஒரு சேவலையும் வளர்த்து வந்துள்ளார். குளிர்காலத்தின்போது கோழிகள் அனைத்தையும் இவரின் குடும்பத்தினர் சமைத்து உண்டு விட இந்த சேவல் மட்டும் எஞ்சியுள்ளது. இச்சேவல் தற்போது முட்டை ஈனுகிறதாம்.இது குறித்து அவர் தெரிவிக்கையில்: மாரி காலத்தில் கோழிகள் அனைத்தையும் சமைத்து விட சேவல் மட்டுமே எஞ்சியிருந்தது. ஒருநாள் கோழிக்கூட்டைச் சென்று பார்க்கையில் அங்கு சேவலுக்கருகில் முட்டை இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தேன்.அயலவர்கள் யாரும் வேடிக்கைகாக முட்டையை கொண்டு வந்து சேவலுக்கருகில் போட்டிருக்கலாமென நான் நினைத்தேன். ஆனால் அடுத்தநாள் இன்னுமொரு முட்டையும் இருந்தது. அதனால் நான் மூன்றாவது நாள் கோழிக் கூட்டுக்கருகில் காத்திருந்தேன். ஆச்சர்யப்படும் வகையில் அச் சேவல் முட்டையிட்டது எனக் கூறியுள்ளார்.


இத்தகவல் தொலைக்காட்சிகள் மூலம் எல்லா இடங்களுக்கும் பரவியதையடுத்து உள்நாட்டு விவசாயத்துறை அமைச்சின் விஞ்ஞானிகள் எனது சேவலை பரிசோதனைக்காக வாங்கிச் சென்றுள்ளனர்.

அது சேவலைப் போன்று தோற்றமளிக்கும் கோழியா அல்லது அனைத்து கோழிகளும் இறந்தபின் அச்சேவல் கோழியாக மாறிவிட்டதா என விஞ்ஞானிகள் ஆராய விரும்புகிறார்கள் என ஹவாங் லீ கூறியுள்ளார்.

என்னைப் பொறுத்தவரை அது ஏனைய சேவல்களைப் போன்றே காலையில் எழுந்து கூவும். ஏனயை கோழிகளுடன் அது சேவல் போன்றே நடந்துகொண்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments