கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்யும் நடவடி்கைக்கு இந்திய நிறுவனமொன்றை ஈடுபடுத்துவதற்கான கோட்டாபய அரசாங்கத்தின் முடிவை அமெரிக்கா பாராட்டியுள்ளது.
கொழும்பு ஆங்கில ஊடகமொன்றின் தகவலின்படி, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலினா பி. டெப்லிட்ஸ், இந்த விடயத்தில் ஒரு இந்திய நிறுவனத்தின் தலையீடு இலங்கையின் கடல்சார் எதிர்காலத்திற்கு அவசியம் என்று கூறினார்.
இந்தியா இலங்கையின் துறைமுக வசதிகள் அல்லது கப்பல் பரிமாற்ற நடவடிக்கைகளின் பயனாளியாக இருப்பதால் இந்த நடவடிக்கை பொருத்தமானது என்று அவர் தெரிவித்தார்.
அபிவிருத்திச் செயற்பாட்டில் தனியார் துறையின் ஈடுபாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த டெப்லிட்ஸ், இலங்கை தனது பொருளாதார வளர்ச்சிக்கான ஏற்பாட்டில் எதிர்காலத்தில்மிகவும் சிறந்த பலனை அடைவதை காண முடியும் என மேலும் தெரிவித்தார்.
No comments
Post a Comment