கொரோனா உயிரிழப்பு சடுதியாக அதிகரிப்பு
இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்றையதினம் மேலும் அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றையதினம் இலங்கையில் 8 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 313ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் கொவிட் தொற்றினால் 63,293 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 56,277 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், 6703 பேர் மாத்திரமே, வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
No comments
Post a Comment