Latest News

January 26, 2021

நாளை காலை 10.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா!
by Editor - 0


சொத்துகுவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 வருடம் சிறை தண்டனை விதித்தது கடந்த 2017 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா தற்போது அவரின் தண்டனை காலத்தை நாளை நிறைவு செய்ய உள்ளார். தற்போது கரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாளை காலை 10.30 மணிக்கு அவர் விடுதலை செய்யப்படுவார் என்று சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்காக அவரிடம் 9 மணி அளவில் கையெழுத்து பெறப்பட்டு சிறை நடைமுறைகள் முடிந்த பிறகு சுமார் 10.30 மணிக்கு அவர் விடுதலை ஆவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


« PREV
NEXT »

No comments