Latest News

November 21, 2020

தமிழீழ விடுதலைப்புலிகள்மீதான தடையை நீக்கக்கோரி உறுப்பினர்களுக்குபிரித்தானியபாராளுமன்றஅழுத்தம்
by Editor - 0

விடுதலைப்புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் கொடுக்ககோரி பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.


விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானிய அரசின் தடை தவறு என பிரித்தானியாவின் விசேட தீர்ப்பாயம் அண்மையில் தெரிவித்துள்ள நிலையில் குறித்த தடையை அரசு நீக்க வேண்டும் என்றும்  அதற்கான அழுத்தங்களை உள்நாட்டு அலுவல்கள்  அமைச்சிற்கும் அரசுக்கும் வழங்குமாறு கோரி பிரித்தானியா வாழ் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்

இந்நிலையில் நேற்று   (20/11/2020) பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினர் Wes Streeting MP (Ilford North)
உடன் Zoom ஊடகம் மூலம் கலந்துரையாடலை மேற்கொள்ளப்பட்டது  இதன் போது விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க அரசுக்கு அழுத்தம் கொடுகக்குமாறு அவரிடம் கோரிக்கைவிடுத்தனர்.

பாராளுமன்ற உறுப்பினருடனான சந்திப்பு மிகவும் பயன் உள்ளதாக அமைந்தது உள்ளதாகவும்  எமக்கு இலங்கை அரசாங்கத்தால் இழைக்கப்பட்டு வரும் அநீதிகள் சம்மந்தமாக தான் நன்கு அறிவேன் என்றும் தடை எடுப்பது பற்றி செவ்வாக்கிழமை உள்துறை அமைச்சரருடன் கலந்துரையாடி சாதகமான பதிலை மிக விரைவாக தருவதாகவும் இது சம்மந்தமாக பாரளுமன்றத்தில் அமர்வு ஒன்று இடம்பெறும் போது நீதியின் பால் அனுசரனை வழங்கி எமது கோரிக்கையை இயன்றளவு நிறைவேற்றுவதாக உறுதி  வழங்கி உள்ளார்
« PREV
NEXT »

No comments