தென் ஆபிரிக்காவை தனிமைப் படுத்தியது போன்று இலங்கையை மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்!
கனடா நீதிக்கான கூட்டமைப்பு தொடக்க நிகழ்வில் பெ. மணியரசன் உரை!
(ரொரன்ரோ, கனடா)
கனடா நாட்டில் இயங்கும் இருபதுக்கும் மேற்பட்ட அமைப்புகள் கூடி கனடாத் தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு என்ற அமைப்பை ஆரம்பித்தன. இதன் தொடக்க நிகிழ்வு 23.11.2020 அன்று நடைபெற்றது. தமிழ்த்தேசிய பேரிக்க தலைவர் பெ.மணியரசன் அவர்கள் வாழ்த்துரை நிழ்த்தி தொடக்கி வைத்தார். 'நெல்சன் மண்டேலாவை சிறைப்படுத்தி கறுப்பின மக்களுக்கெதிராக இனப்படுகொலை நிகழ்த்திய தென்ஆபிரிக்கா அரசை உலகநாடுகள் தனிமைப் படுத்தின. இந்தியா கூட அந்நாட்டுடன் வீளையாட்டு போட்டி நிகழ்த்த தடைவிதித்தது. அதுபோன்று தமிழிப் படுகொலை புரிந்த சிறீலங்கா அரசை உலக நாடுகள் தூதரக தொடர்புகளைத் துண்டித்து தனிமைப் படுத்தவேண்டும். தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டும்.' என தனது தொடக்க வுரையில் திரு.பெ.மணியரசன் அவர்கள் கேட்டுக் கொண்டார்.
இணையம் ஊடக நடைபெற்ற மேற்படி நிகழ்வில் கனடா, தமிழ்நாடு, அமெரிக்கா என உலகின் பல்வேறு நாடுகளிலும் இருந்து தமிழர்கள் பங்குபற்றி இருந்தனர். நிகழ்வின் இறுதியில் பல கனடியத் தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கருத்துரை வழங்கினர்.
இந்த அமைப்பின் தொடக்க முயற்சியாக கனடா நாட்டுக்கு சிறீலங்கா அரசால் தூதுவராக தெரிவு செய்யப்பட்டுள்ள முன்னாள் விமானப்படை அதிகாரியான சுமங்கள டயஸ் என்பவரை தடுத்து நிறுத்தும் முயற்சி இடம்பெறும் என தமிழ் அமைப்புக்களை ஒன்றிணைகும் பணியை செய்த தமிழ்த்தாய் மன்றத்தின் ஆளுநர் குழு உறுப்பினர் திரு.முகுந்தமுரளி அவர்கள் தெரிவித்தார். மேற்படி விமானப்படை அதிகாரி தமிழினப் படுகொலையில் ஈடுபட்டதற்கான ஆதாரத் திரட்டு கனடிய அரசுக்கு எடுத்து இயம்பப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
No comments
Post a Comment