Latest News

October 05, 2020

எந்த நேரத்திலும் ஊரடங்குச் சட்டம் வரலாம்? பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்புஅறிவிப்பு
by Editor - 0

தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் நாட்டில் எந்த நேரத்திலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்த நேரிடலாம் என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது,

தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் நாட்டில் எந்த நேரத்திலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்த நேரிடலாம் என்பதால் மக்கள் எந்த வேளையிலும் தயாராக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

எனவே மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை சேர்த்துவைத்திருக்கும் வரை ஊரடங்குச் சட்டம் காத்திருக்காது. ஆகவே எப்போதும் தயாராக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இதேவேளை, கொரோனா தொற்றானது திவுலுப்பிட்டிய, கம்பஹா பகுதியில் மாத்திரம் மட்டுப்பட்டிருக்கும் அல்லது அந்த எல்லையை தாண்டி அருகிலுள்ள பிரதேசங்களுக்கு மாத்திரம் வந்திருக்கும் என்றும் கூறமுடியாது.

சில வேளைகளில் தத்தமது பிரதேசங்களிலும் பரவியிருக்கலாம் என்பதால் மக்கள் மிகுந்த அவதானத்துடன்தான் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்

« PREV
NEXT »

No comments