இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனுக்கு புதிய அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி அவர் பின்தங்கிய கிராமப்புற அபிவிருத்தி, உள்நாட்டு விலங்கு வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய பதவியை ஏற்றுக் கொண்டுள்ளார்.
முன்னர் அவருக்கு வெகுஜன ஊடக மற்றும் தபால் சேவைகள் இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment