Latest News

September 02, 2020

அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் நாளினை முன்னிட்டு.."*கவனயீர்ப்பு ஒன்றுகூடல் பேர்ன்.Bern
by Editor - 0

அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் நாளினை முன்னிட்டு.."
*கவனயீர்ப்பு ஒன்றுகூடல் பேர்ன்.
30.08.2020 உலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவு நாளினைஅனுஷ்டிக்கும் முகமாக இன்று 31.08.2020 திங்கள் மாலை 4.30 மணியளவில் சுவிசின்பேர்ன் மானிலத்தின் பேருந்து தரப்பிடத்தில் ஒரு கவனயீர்ப்பு ஒன்றுகூடல்நடாத்தப்பட்டது.
மாலை 6.30 வரை இடம்பெற்ற இந்த ஒன்றுகூடலில் பெருமளவிலாக தாய்த்தமிழ் உறவுகள் கலந்துகொண்டுஉலகநாடுகளை நோக்கி தமக்கான நீதியினை கேட்டுக்கொண்டனர்.
2009 ல் இலங்கை பேரினவாத அரசால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட இனப்படுகொலைக்கான நீதி இதுவரைகிடைக்காத நிலையில் அரச இராணுவத்திடம் இறுதி யுத்தத்தில் கையளிக்கப்பட்டோர் சரணடைந்தோர்கடத்திச்சென்று காணாமல் ஆக்கப்பட்டோரைத் தொடர்ந்தும் தேடிக்கொண்டிருக்கும் அவர்களது உறவுகள்கண்ணீர்மல்க தமது உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதுவரை இவர்களிற்கான நீதி கிடைக்கவில்லை என்பது கூடுதல் தகவல்.

ஏற்பாடு: தமிழர் ஒருங்கிணைப்பு குழு சுவிஸ்.


« PREV
NEXT »

No comments