Latest News

August 31, 2020

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் திரண்ட தமிழர்கள்
by Editor - 0



சர்வதேச காணாமல் ஆக்கப்பட் டோர் தினம் ஆகஸ்ட் 30.ஆம் திகதி யான இன்று உலகளவில் கடைப்பிடிக்கப்படுகின்றது. இலங்கையிலும் வடக்கு - கிழக்கில் பெரும் எழுச்சியுடன் இந்தத் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இறுதிப்போர் நடைபெற்ற போதும் அதற்கு அண்மைய காலப்பகுதியிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழர் பிரதேசம் எங்கும்  கவனவீர்ப்புப் போராட்டங்கள்  முன்னெடுக்கப்பட்டன. 

அதே சமயம் இலங்கையில் நடந்த போர் காரணமாக கடத்தியும், கைது செய்தும் கொண்டு செல்லப்பட்ட தமிழர்களுக்கு  இன்றுவரை  என்ன நடந்தது அறியாமல் அவர்களுக்கு நீதி வேண்டி உலகில் வாழும் தமிழர்களும் போராடி வருகிறார்கள் அதன் ஓர் அங்கமாக லண்டனில் இன்று காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு மாபெரும் நீதிப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. 

இதில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும்,  குற்றவளிகளை
காப்பற்ற வேண்டாம் தமிழர்களுக்கு நீதி வேண்டும் என்ற கோஷங்களை அங்கு பங்குபற்றியவர்கள் முழங்கினார்கள். 


« PREV
NEXT »

No comments