Latest News

September 05, 2020

விமான நிலையத்தை திறக்க இரண்டு ஆண்டுகள் செல்லுமா?
by Editor - 0


சுற்றுலா பயணிகளுக்காக கட்டுநாயக் சர்வதேச விமான நிலையம் திறக்கப்படுவது மேலும் தாமதமாகும் என்று சுற்றுலா அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுகாதார விதிமுறைகள் இல்லாமல் விமான நிலையத்தை முழுமையாக திறக்கக்கூடிய காலம் நிச்சயமற்றது என்று சுற்றுலா அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஒக்டோபரில் திறக்கப்படும் என்று அரசாங்கம் முன்பு அறிவித்திருந்தது.

சுகாதார அதிகாரிகள் அளித்த அறிவுறுத்தலின் அடிப்படையில் விமான நிலையத்தை வெளிநாட்டினருக்கு முழுமையாக திறக்க முடியும் என்று சுற்றுலா அமைச்சின் செயலாளர் கூறுகிறார்.

எனினும் உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, COVID-19 தொற்றுநோய் முற்றிலுமாக ஒழிக்க இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும்.

மேலும் இந்த விஷயத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ளும்போது சுகாதார விதிமுறைகளை தளர்த்துவது கடினம் என்று செயலாளர் கூறுகிறார்.

இதையடுத்து விமான நிலையத்தை திறக்க இரண்டு ஆண்டுகள் செல்லுமா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.
« PREV
NEXT »

No comments