தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியிலிருந்து நீக்கலாம் என உள்துறை அமைசகத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்தாக மலேசியாவின் முன்னாள் பிரதமர் துன் கலாநிதி மகாதீர் முகமது அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புத்ராஜெயாவில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகயவியலாளர் தொடுத்த கேள்விக்குப் பதில் அளிக்கும் போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:-
தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியிலிருந்து நீக்கலாம் என இன்றைய பிரதமரும் முன்னாள் உள்துறை அமைசருமான மொகிதீன் யாசினுக்கு எழுதியதாக முன்னாள் பிரதமர் துன் கலாநிதி மகாதீர் முகமது அவர்கள் தெரிவித்துள்ளார்.
குறித்த கடிதத்தை கடந்த சனிவரி மாதம் 12 ஆம் திகதி எழுதப்பட்டுள்ளது.
No comments
Post a Comment