Latest News

January 04, 2020

ரஞ்சன் ராமநாயக்க சற்று முன்னர் கைது
by admin - 0

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாதிவெலயிலுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் இன்று மாலை சோதனை நடத்தப்பட்ட நிலையில் அவரது கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

நுகேகொடை நீதவான் நீதிமன்றில் பெற்றுக் கொள்ளப்பட்ட தேடுதல் ஆணையின் அடிப்படையில் இந்த திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

சட்டவிரோதமான முறையில் கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இவர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
« PREV
NEXT »

No comments