Latest News

January 17, 2020

தமிழ் பெண்ணுக்கு பிரித்தானியாவில் கிடைத்த மிகப்பெரும் அங்கீகாரம்!
by admin - 0

சொல்லிசைக் கலைஞரும் பாடகியுமான மாதங்கி அருள்பிரகாசம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பிரித்தானிய அரசகுடும்பத்தின் எம்பிஈ (MBE) பதக்கத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

மாதங்கியின் இசைப் பங்களிப்புக்காக வழங்கப்பட்ட Member Of The Most Excellent Order Of The British Empire ((MBE)) பதக்கத்தினை இளவரசர் வில்லியமிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

பதக்கத்தினைப் பெற்றுக்கொண்ட மாதங்கி அதனைத் தனது தாயாருக்கு அணிவித்துச் சிறப்பித்தார்.

பக்கிங்கம் அரண்மனையில் நடைபெற்ற இந்த பதக்கம் சூட்டும் விழாவில் தனது தாயார் கலா அருள்பிரகாசத்தினையும் அழைத்துவந்திருந்தார்.

கடந்த ஆண்டு ராணியின் பிறந்தநாளை முன்னிட்டு மாதங்கிக்கு MBE பதக்கம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தத்தக்கது.

எங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை வழங்க குறைந்த ஊதியத்தில் பணியாற்றிய என் அம்மாவின் நினைவாக இந்தப் பதக்கத்தினை ஏற்றுக்கொள்கிறேன் என்று மாதங்கி தனது இன்ஸ்ரகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

மாதங்கி தனது தாய், தந்தையுடன் 1980 களில் இலங்கையில் இருந்து வந்து இங்கிலாந்தில் புகலிடம் பெற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு தொழிலாளர் வர்க்கத்தின் தலைமுறையில் குடியேறியவர் என்ற முறையில் எனது பங்களிப்புக்கு அங்கீகாரம் கிடைப்பது மிகவும் நல்லது.

உண்மையை இசை மூலம் பேசுவதற்கு எனக்குச் சுதந்திரம் உள்ளது. அந்த உரிமைகள் இல்லாதவர்களுக்காக நான் தொடர்ந்து போராடுவேன் என்று மாதங்கி கூறியுள்ளார்.

இவரது தந்தையார் ஈழவிடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான (ஈரோஸ் அருளர்) அருள்பிரகாசம் என்பது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments