தமிழ் ஊடகவியலாளர்களை கொலை செய்யப்போகும் கோத்தபாய .!
ஜனவரி 23, 2020
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சிலருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு துண்டுப்பிரசுரங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
குறித்த துண்டு பிரசுரங்கள் மட்டக்களப்பு பேருந்து நிலையத்திற்கு மேல் உள்ள மட்டு. ஊடக அமையத்தின் அலுவலகத்திற்குள் போடப்பட்டுள்ளது.
மட்டு. ஊடக அமையத்திற்குள் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு ஊடக சந்திப்பிற்காக ஊடகவியலாளர்கள் சென்று அலுவலகத்தை திறந்தபோது குறித்த துண்டு பிரசுரங்கள் போடப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர்.
குறித்த துண்டு பிரசுரத்தில், “எச்சரிக்கை! எச்சரிக்கை! இவர்கள்தான் வெளிநாட்டுப் புலிகளிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு அரசுக்கு எதிராக செயற்படும் ரிப்போட்டர்ஸ்.
இவர்களுக்கு விரைவில் மரண தண்டனை விதிப்போம்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் துண்டு பிரசுரத்தில் ஊடகவியலாளர்களின் ஒளிப்படங்களும் அச்சிடப்பட்டுள்ளன.
No comments
Post a Comment