Latest News

November 07, 2019

மலேசியாவில் 12 தமிழர்கள் கைது! பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம்
by Editor - 0

இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்காக அனுதாப கூட்டமொன்றை மலேசிய மண்ணில் ஏற்பாடு செய்த 12 தமிழர்கள் கைது செய்யபட்டதை கண்டித்து பிரித்தானியாவின் மலேசிய தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.


நேற்று இடம்பெற்ற இந்த போராட்டத்தின்போது, தமிழர்களை தாக்குவதை நிறுத்துங்கள் மலேசியாவில் உள்ள தமிழர்களுக்கு நீதி வேண்டும் என்னும் பாததைகளை கையில் ஏந்தியவாறு போராட்டம் இடம்பெற்றது.

இதில் நாடுகடந்த தமிழீழ அரசங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் சொக்கலிங்கம் யோகலிங்கம், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களான இராஜலிங்கம் மற்றும் ஆறுமுகம் அவர்களும் கலந்து கொண்டன


உலகத்தில் எந்த மூலையில் வாழும் தமிழனுடைய உரிமை பாதிக்கப்பட்டாலும் பிரித்தானிய தமிழ் மக்கள் அவர்களுடன் சேர்ந்து போராடுவார்கள் என்பதனையும் இனிமேலும் தமிழர்கள் உலகளாவிய ரீதியில் ஒன்றினைந்து போராட வேண்டுமென்பதனையும் இப்போராட்டம் வலியுறுத்ததியுள்ளது.


விடுதலைப்புலிகள் அமைப்பு மலேசியாவில் புத்துயிரூட்ட முயற்சிப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் பேரில் மலேசியாவில் 2 சட்ட மன்ற உறுப்பினர்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


« PREV
NEXT »

No comments