தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை விரைவில் கண்டுபிடிப்பதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பிரித்தானியா பாராளுமன்றத்தில் மாநாடு நடைபெற்றது.
காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நேற்று நடைபெற்ற மாநாட்டினை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
யுத்தம் நிறைவடைந்து பத்து வருடங்கள் கடந்துள்ள நிலையில், இதுவரை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டுபிடிக்க இலங்கை அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. இந்நிலையில் பிரித்தானியா உட்பட சர்வதேச நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மாநாட்டில் கோரிக்கை முன்வைக்கப்பட்து.
மாநாட்டில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் Siobhain McDonagh, மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
No comments
Post a Comment