முல்லைத்தீவில் தமிழருக்கு சொந்தமான பாரம்பரிய பிள்ளையார் ஆலய வளாகத்தை அபகரித்து விகாரை அமைத்த மேதாலங்கார கீர்த்தி தேரர் மரணமானார்.
புற்றுநோய் காரணமான கொழும்பு மகரகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் மரணமானார்.
தமிழரின் பாரம்பரிய பிரதேசமான முல்லைத்தீவு - செம்மலை நீராவிப்பிட்டியில் தொல்பொருள் திணைக்களத்தின் ஆதரவுடன் குருகந்த ரஜமகா விகாரையை குறித்த பிக்கு அமைத்திருந்தார்.
தொடர்ந்து செம்மலை பிள்ளையார் ஆலயத்தையும் கணதேவி தேவாலயம் என சிங்களத்தில் பெயரிட்டு அடாவடி செய்துவந்தார். எனினும் நீதிமன்றத் தலையீடு காரணமாக பிள்ளையார் ஆலயம் மீட்கப்பட்டது. ஆனால், ஆலய வளாகத்தில் தடைகளையும் மீறி பௌத்த விகாரை அமைக்கப்பட்டு சிலைகளும்கூட இன்றளவும் கட்டப்பட்டே வந்தது என்பதும் குறிப்பிடத்தக்து.
No comments
Post a Comment