Latest News

August 19, 2019

சாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்!
by admin - 0

90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின் வழியாக திரும்பி வந்துள்ளது.

1925 ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி தெற்கு கரோலினாவின் சார்ல்ஸ்டனில் இருந்து க்யூபாவின் ஹவானாவை நோக்கி பயணிக்க தொடங்கியது எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல்.

அதாவது சாத்தான் முக்கோணம் என்று அழைக்கப்படும் பெர்முடா முக்கோணத்தின் வழியாகவே இந்த கப்பல் ஹவானாவை சென்றடைய முடியும்.

ஆனால் புறப்பட்ட இரண்டாவது நாளிலேயே எஸ்எஸ் கொடபக்சி கப்பல் காணாமல் போனது, அதன் பின்பு அந்த கப்பல் பற்றிய தகவலே இல்லை. இந்த நிலையில் குறித்த கப்பல் தற்போது திரும்பி வந்துள்ளது.

ஆனால் திரும்பி வந்த கப்பலில் ஒருவரும் இல்லை என்றும், அந்த கப்பல் பல ஆண்டுகளுக்கு முன்பே கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

1925 ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி தெற்கு கரோலினாவின் சார்ல்ஸ்டனில் இருந்து க்யூபாவின் ஹவானாவை நோக்கி எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல் சாத்தான் முக்கோணம் என்று அழைக்கப்படும் பெர்முடா முக்கோணத்தின் வழியாக செல்ல ஆரம்பித்தது.

பெர்முடாவில் இருந்து மியாமி, பின் ஃப்ளோரிடாவில் இருந்து புவேர்ட்டோ, ரிக்கோவின் சாண் ஜுவன் ஆகிய பிரதேசங்களை இணைத்தால் உண்டாகும் பகுதி தான் பெர்முடா முக்கோணம் (Bermuda Triangle).

மர்மமான சாத்தான் முக்கோணத்தின் ஒரு புள்ளியான ஃப்ளோரிடாவை கடந்து தான் எஸ்எஸ் கொடபக்சி ஹவானாவை அடைய முடியும்.

ஆனால், அந்த கப்பல் ஹவானாவை சென்றடையவில்லை. புறப்பட்ட இரண்டாவது நாளிலேயே எஸ்எஸ் கொடபக்சி காணமல் போனது, அதன் பின்பு அந்த கப்பல் பற்றிய தகவலே இல்லை.

எஸ்எஸ் கொடபக்சி கப்பல் மட்டுமின்றி, இந்த கப்பலில் 2340 டன் எடையுள்ள நிலக்கரியுடன் கேப்டன் டபிள்யூ ஜே.மெயர் தலைமையில் பயணித்த 32 மாலுமிகள் பற்றிய எந்த விதமான தகவலும் இல்லை.

சமீபத்தில் கியூபா கடலோர காவல்படையினர், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின் வழியாக ஒரு கப்பல் தீவை நோக்கி வருவதை கண்டுள்ளனர்.

அதை தொடர்பு கொள்ள முயற்சி செய்து, பயன் அளிக்காததை தொடர்ந்து, அதன் அருகே சென்று பார்த்த போதுதான் அது 90 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன எஸ்எஸ் கொடபக்சி என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதனை தொடர்ந்து பெர்முடா முக்கோணத்தில் காணாமல் போன மிகப்பெரிய கப்பல்களில் ஒன்றான எஸ்எஸ் கொடபக்சி, ஒரு நாடோடி போல இத்தனை ஆண்டுகளாய் பெர்முடா முக்கோணத்துடன் இணைந்தே கிடந்துள்ளது.

திரும்பி வந்த கப்பலில் ஒருவரும் இல்லை என்றும், அந்த கப்பல் பல ஆண்டுகளுக்கு முன்பே கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கப்பலை ஆராய்ந்து பார்த்ததில் எஸ்எஸ் கொடபக்சி கேப்டனின் லாக் புக் (Log book) எனப்படும் குறிப்பு எழுதும் நோட்டு புத்தகம் கிடைத்துள்ளது.

ஆனால், அந்த நோட்டு புத்தகத்தில் கடந்த 90 ஆண்டுகளாய் எஸ்எஸ் கொடபக்சி கப்பலுக்கும், அதில் பயணித்த 33 பேருக்கும் என்ன நடந்தது என்பது பற்றிய ஒரு தகவலும் கிடைக்கப் பெறவில்லை.

க்யூபா நாட்டு அரசாங்கம், எஸ்எஸ் கொடகப்சி கப்பல் காணமல் போனது ஏன்..? மற்றும் திரும்பி கிடைக்கப்பெற்றது எப்படி..? என்பது பற்றிய விசாரணையை தொடங்கியுள்ளது.
« PREV
NEXT »

No comments