கல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் தாக்குதல்தாரிகள் இருவரும் பொதுமகன் ஒருவரும் உயிரிழந்துளள்தாக குறிப்பிடப்படுகின்றது.
இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவினர் சாய்ந்தமருது பகுதியில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது சந்தேகத்துக்கிடமான குழுவினருக்கும் பாதுகாப்புப் பிரிவினருக்கும் இடையில் நேற்றிரவு பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றது.தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் அங்கிகள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலுக்கமைய, குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தபோது துப்பாக்கிப் பிரயோகம் நடத்த நேரிட்டதாக, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து கல்முனை, சம்மாந்துறை மற்றும் சவலக்கடை பகுதிகளுக்கு உடன் அமுலாகும் வகையில் நேற்றிரவு முதல் பிரயோகிக்கப்பட்ட ஊடரங்குச் சட்டம், மறு அறிவித்தல் வரை அமுலில் காணப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
No comments
Post a Comment