இனவழிப்பின் 10 வருடங்களாகும் இந்த 2019 ஆண்டில் ஈழத்தமிழ் மக்கள் அனைவரும் புலம்பெயர் தேசங்களில் திரண்டு எழ வேண்டிய தேவை மிக அவசரமாக எழுந்திருக்கிறது.
நாம் ஒவ்வொருவரும் என்ன செய்யப்போகின்றோம்???
தமிழ்த்தேசிய இனத்தின் பிள்ளைகளாகிய ஒவ்வொருவரும் தம்மாலான கடமைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டிய காலமிது.
ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனித உரிமைகள் சபையின் 40 ஆவது கூட்டத்தொடர் நிறைவடையும் தருணமிது.
சிங்கள பேரினவாத அரசிற்கு ஆதரவாக ஐ. நா. சபையும் 2 ஆண்டுகாலத்திற்கு காலநீடிப்பை சிங்கள அரசிற்கு வழங்குவதன் மூலம் ஈழத்தமிழ் மக்கள் மீது கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை தொடருமாறு ஓர் உறுதிமொழியை அழிந்த்திருப்பதாகவே அனைவரும் உணர்கின்றோம்.
இது ஏப்படி இடம்பெற்றது?
புலம்பெயர் ஈழத்தமிழ் மக்கள் தமது சொந்த விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் நிச்சயம் ஏற்கனவே ஒன்றுகூடியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்விடத்தில் தவறிவிட்டதால் மேலும் இரண்டு ஆண்டு காலம் சிங்கள அரசிற்கு வழங்கப்பட்டிருக்கின்றது.
அதை எதிர்த்து, ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனித உரிமைச் சபை முன்றலில், பிரித்தானியாவில் வசிக்கும் இரு இளைஞர்கள் தம்மாலான எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தார்கள்.
சரியான காலப்பகுதியாகிய, ஶ்ரீலங்கா பற்றிய அறிக்கை வாசிக்கப்பட்டு, ஐ. நா. வில் விவாதம் இடம்பெற்ற 20-03-2019 புதன்கிழமை அன்று இவர்கள் ஐ. நா. முன்றலில் எமது தேசியக்கொடியுடன் வந்திணைந்தனர்.
இந்த எதிர்ப்பு தனியே ஐ. நா. வை கோருவதாக மட்டுமல்லாது, ஏன் தமிழ் மக்கள் வீதிக்கு இறங்கத் தயங்குகின்றார்கள் என்ற கேள்வியை எழுப்பக்கூடியதுமான ஓர் எழுச்சி அடையாள ஆர்ப்பாட்டமாகவே அமைந்தது.
எந்த முன்னெடுப்புக்களும் இன்றி தமது இனம்சார்ந்த உணர்வுபூர்வமான மனக்கிடக்கையை வெளிப்படுத்த பிரித்தானியாவில் இருந்து ஜெனிவாவிற்கு பயணம் செய்து, ஈழ்த்தமிழ் அடையாளத்தை நிலைநிறுத்தி எமது தேசியக்கொடியை கையிலேந்தியவண்ணம் இவர்கள் கோஷமிடுக்கொண்டிருந்தார்கள்.
‘தடை அதை உடை’ என்பதற்கு ஆதாரமாக ஐ. நா. முன்றலில் ஐ. நா விற்கு எதிராக கோஷமிட்டிருந்தார்கள். பல ஜெனிவா ஊடகங்களும் இவர்களை நேர்காணல் எடுத்திருக்கிறார்கள்.
ஜெனிவாப் பொலிசாரும் இவர்களின் அடையாளங்களைப் பெற்றுச் சென்றிருக்கின்றார்கள்.
இவர்கள் சொல்ல வருவது என்ன?
தமது கைகளில் தாங்கியிருந்த பதாகைகளின் மூலம் இவர்கள் அந்த கருத்தை சொல்ல முனைந்திருந்தார்கள்.
- ஈழ்த்தமிழ் மக்களின் காவல் தெயவங்களாகிய தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை உடனடியாக நீக்கப்படவேண்டும் என்றும்;
பல புலம்பெயர் அமைப்புக்களை இது குறித்து வினவியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால் தமக்கு ஏற்பட்ட அதிருப்பதியின் காரணமாக, ஐ. நா. வையே அந்தத் தடையகற்றுமாறு கோரிருந்தார்கள்.
தடை அகற்றப்படாமையால் தான் ஈழ்த்தமிழ் மக்கள் குறிப்பாக பிரித்தானிய வாழ் தமிழ்மக்கள் வீதிக்க இறங்க மறுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை உடைப்பதற்காகவும், புது உத்வேகத்தை மக்களுக்கு கொடுப்பதற்காகவும் இவர்களின் இந்த திடீர் முயற்சி அமைந்திருந்தது.
ஒருவருக்கு மேல் ஒன்றுகூடும் பட்சத்தில் அது ஓர் குழுவான போராட்டமே என்பது இவர்களின் ஆணித்தரமான செய்தி.
- தொடர்ச்சியான இனவழிப்பை கட்டமைத்து நேர்த்தியாகச் செய்யும் சிங்கள அரசிற்கு இனியும் கால அவகாசம் கொடுக்க வேண்டாம் என்றும், அவ்வாறு இல்லாவிடில் அது ஐ. நா. சபை ஈழ்த்தமிழ் ம்க்களுக்குச் செய்யும் துரோகமே என்றும்;
- ‘புனர்வாழ்வு’ என்ற பெயரில் சிங்கள அரசு கைதுசெய்யப்பட்ட போராளிகளுக்கு செய்யும் நாசகாரத்துரோகமாகிய ‘நஞ்சூட்டல்’ உடன் நிறுத்தப்பட வேண்டும் என்றும்;
உண்மையில் இந்த ‘நஞ்சூட்டல்’ என்ற திட்டமிட்ட தமது இனவழிப்பின் ஒரு பகுதியை, ஐ. நா. சபையின் கண்காணிப்பின் கீழிருக்கும் போதே சிங்கள போரினவாத அரசு கச்சிதமாக நிறைவேற்றுகின்றதென்றால், அந்த அரசின் மீதான ஐ. நா. வின் கண்காணிப்பும் வீணானதே அத்துடன் அதன் மீதான ஐ. நா. வின் நம்பிக்கையும் வெறும் கற்பனையை. பின் எதற்கு மேலதிக காலவகாசம்? இது ஒன்றே ஐ. நா. விற்கு மிகச் சிறந்த உதாரணமாகும்.
- ஐ. நா. சபையே கண்மூடித்தனமாக எந்த முடிவையும் எடுக்காதே என்றும்;
இவர்கள் தமது பதாகைகள் மூலம் வலியுறுத்தியுருந்தார்கள்.
இதற்கு மேல், சமகால அரசியலறுந்து, மக்கள் தான் தம்மைப்போல் திரண்டெழ வேண்டும் என்பது இவரகளினதும் மற்றும் இவர்கள் போன்ற தமிழத்தேசிய உணர்வாளர்களினதும் பேரவாவாகும்.
10 வருடங்களாகும் எமது இனவழிப்புற்கு எதிராக என்ன செய்யப்போகின்றோம்??? இது தான் எம்மொவொருவரிடமும் இருக்க இன்றைய கேள்வி!
தமிழா, இது 10 வருடமாகும் அந்த அவலச்சாவுகளின் அத்மாக்கள் சாந்தியடையாமல் கேள்வி எழுப்பும் காலம்!
உறக்கம் வேண்டாம், எழுந்து வா; போராட்டமே முடிவு!
No comments
Post a Comment