Latest News

March 19, 2019

1.25 மில்லியன் யூரோவுக்கு விலைபோன 'அர்மாண்டோ'
by Editor - 0

புறாப் பந்தயத்தில் சம்பியன் பட்டம் வென்ற புறவொன்று 1.25 மில்லியன் யூரோவுக்கு ஏலத்தில் விற்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

புறாவை ஏலத்தில் விடும் தளமான பிபா 'அர்மாண்டோ' எனும் புறாவை சமீபத்தில் ஏலத்தில் விட்டது. அதிக தூரம் கடந்த மிகச்சிறந்த பெல்ஜியம் புறா எனக்கூறப்படும் அர்மாண்டோவை ''புறாக்களின் லூயிஸ் ஹாமில்டன்'' என அழைக்கிறார்கள்.

லூயிஸ் ஹாமில்டன் பிரிட்டனைச் சேர்ந்த கார் பந்தைய வீரர். ஐந்து முறை போர்முலா வன் உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர்.

இந்த புறா ஏலத்தில் விற்கப்படுவதற்கு முன்னர் ஒரு புறா அதிகபட்சமாக 376 ஆயிரம் யூரோவுக்கு விற்கப்பட்டிருந்தது. இந் நிலையிலேயே  அர்மாண்டோ 1.25 மில்லியன் யூரோவுக்கு விலை போயுள்ளது.

அர்மாண்டோவுக்கு வயது ஐந்துதான். தற்போது ஓய்வுக்காலத்தில் மகிழ்ச்சியாக இருக்கும் அந்த புறா ஏற்கனவே சில குஞ்சுகளுக்கு 'அப்பா' ஆகிவிட்டது.

ஆனால் அர்மாண்டோ 2018 ஏஸ் புறா சாம்பியன்ஷிப், 2019 புறா ஒலிம்பியாட் மற்றும் தி ஆங்குலோமி என மூன்றிலும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.





« PREV
NEXT »

No comments