Latest News

March 15, 2019

பிரியங்க பெர்னாண்டோதப்பிக்க இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள்
by admin - 0

பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் உள்ள சிறிலங்காதூதரகத்திற்கு எதிரில் சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திரத் தினம் கொண்டாடப்பட்ட 2018ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களை நோக்கி “கழுத்தை அறுக்கும்” சைகையை காண்பித்த பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்குஎதிராக தொடரப்பட்ட வழக்கு மார்ச் 15 ஆம் திகதியான இன்றைய தினம் விசாரணைக்குவந்தது.இந்த விசாரணைகள் இடம்பெற்ற போது நீதிமன்றத்திற்கு வெளியில்திரண்டிருந்த புலம்பெயர் தமிழர்கள், “கழுத்தை அறுக்கும்” சைகையை காண்பித்த பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோதப்பிக்க இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.





















சிறிலங்கா இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்கபெர்னாண்டோவுக்கு எதிராக இடம்பெறும் இந்த வழக்கு விசாரணை, 2018 பெப்ரவரி 4 ஆம் திகதி இலண்டனிலுள்ள சிறிலங்கா தூதரகத்திற்கு எதிரில்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மூன்று இளைஞர்களால் தொடர்ந்த வழக்கு தொடர்பானவிசாரணையே இலண்டன் வெஸ்ற்மினிஸ்டர் நீதிவான் நீதிமன்றில் இன்று இடம்பெற்றது.இந்த வழக்கை இந்த ஆண்டு பெப்ரவரியில் விசாரணைக்குஎடுத்திருந்த வெஸ்ட்மினிஸ்டர் நீதிவான் நீதிமன்றம் பிரிகேடியர் பிரியங்கபெர்னாண்டோவை குற்றவாளியாக அடையாளப்படுத்தியதுடன், அவரைகைதுசெய்யுமாறும் பிடியாணை பிறப்பித்தது.






எனினும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்குஇராஜதந்திர தண்டனை முக்தி இருப்பதாக சிறிலங்கா வெறிவிவகார அமைச்சு, பிரித்தானியவெளிவிவகார அமைச்சின் ஊடாக தெரியப்படுத்திய நிலையில் அவர் மீதான பிடியாணையை வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் மீளப் பெற்றுக்கொண்டது.எவ்வாறாயினும் மார்ச் முதலாம் திகதி இடம்பெற்ற வழக்கவிசாரணையின் போது சிறிலங்கா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பு அதிகாரியாககடமையாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் கழுத்தை அறுக்கும் சைகையைகாண்பித்து அச்சுறுத்திய நடவடிக்கை அவரது இராஜதந்திர கடமையுடன் தொடர்பில்லை என்றுநீதிமன்றம் அறிவித்தது.இந்த நிலையில் இன்றைய தினம் இந்த வழக்கு மீண்டும்விசாரணைக்கு வந்தபோது, லண்டனுக்கான சிறிலங்கா உயர்ஸ்தானிகர்அலுவலகத்தின் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணிகள் தமது பக்க நியாயத்தை தெளிவுபடுத்தினர்.







இதன்போது நீதிமன்ற விசாரணைகளில் தொழில்நுட்பட குறைபாடுகள்இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டதற்கு அமைய அதனை ஏற்றுக்கொண்ட நீதவான், பிரிகேடியர்பிரியங்க பெர்னாண்டோ “கழுத்தை அறுக்கும்” சைகையை காண்பித்தன் ஊடாக அச்சுறுத்தல் விடுத்த  வழக்கை மீண்டும் மே மாதம் 7 திகதி எடுத்து விசாரிப்பதற்காக நீதிமன்றம் அறிவித்துள்ளது அதன்படி பிரிகேடியருக்கு எதிரான வழக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 



« PREV
NEXT »

No comments