Latest News

January 21, 2019

இனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...!!!
by admin - 0

கடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதன்போது பாதுகாப்புப் பணியிலிருந்த பிரிகேடியர் பிரியங்கா பெர்ணான்டோ ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழர்களை கழுத்தை அறுப்பதாக சமிக்கை மூலமாக காட்டினார். அதையடுத்து அங்கு நின்ற தமிழர்கள் கொதித்தெழுந்தனர். பின்னர் வெஸ்ட்மின்ஸ்டர் காவல் நிலையத்தில் பலர் முறைப்பாடு செய்தனர்.



அவ்வழக்கானது இன்று (21/01/2019) வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றத்தில் (Westminster Magistrates Court) நடைபெற்றது, இந்த பிரபல சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான கீத் குலசேகரம் வழிநடத்தினார். சாட்சியாளர்களான மயூரன் சதானந்தன், கோகுலகிருஷ்ணன் நாராயணசாமி, வினோத் பிரியந்த, முன்னாள் நாடுகடந்த அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் சொக்கலிங்கம் யோகலிங்கம், மற்றும் இந்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்த சபேஸ்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்கள் சார்பில் Public Interest Law Centre என்ற சட்ட நிறுவனத்தை சேர்ந்த Paul Heron மற்றும் Helen Mowat ஆஜராகினர்.






மூன்று பிரிவின் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது, அவற்றில் இரண்டு பிரிவுகளில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
« PREV
NEXT »

No comments