Latest News

January 29, 2019

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் மரபுத்திங்கள் 2019
by admin - 0

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் மரபுத்திங்கள் 2019



நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் பிரித்தானியாவில் தமிழ் மரபுத் திங்கள் (பொங்கல் திருநாள்), 19ம் திகதி ஜனவரி 2019 சனிக்கிழமை அன்று விமர்சையாக இலன்டனிலுள்ள Archbishop Tenison High School, Selborne Road, CR0 5JQ எனும் இடத்தில் பொதுமக்கள் மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தன்னார்வத் தொண்டர்கள் உள்ளிட்டோரின் பங்களிப்புடன் இனிதே நடைபெற்றது.

இவ் விழாவில் உலகத் தமிழர்களின் தொன்மையைப் பறைசாற்றும் விதமாக பொங்கல் பொங்குதல் மற்றும் கலைநிகழ்வுகள் ஆகியன நடைபெற்றிருந்தன.

இந்நிகழ்வின் முதல் நிகழ்வாக பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்திலே பொங்குவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டு பொங்கல் பொங்குதல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பிரித்தானிய தேசியக்கொடி, தமிழீழ தேசியக்கொடி ஆகியன தேசிய கீதம் இசைக்கப்படுகின்ற நேரத்தில் ஏற்றப்பட்டன.



அதனைத் தொடர்ந்து கலைநிகழ்வுகள் யாவும் ஆரம்பமாகியது. கவிதை, பேச்சு, நடனம், நாடகத்துடன் கூடிய நடனம், பாடல்கள், இசைக்கருவி வாசித்தல், என்பன இடம்பெற்றன. எமது கலை கலாச்சார பண்பாடுகளை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டியதன் தேவை அறிந்து இந்நிகழ்வில் கலை நிகழ்வுகளில் பங்கு கொண்ட 130 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. கலையை வளர்க்கும் நோக்கத்தோடும், ஈழத்தமிழர்களின் வலிகளை காட்சிகளாக்கிய நடனங்களை நெறிப்படுத்திய ஆசிரியர்களுக்கு கேடையமும் மதிப்பளிப்பும் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இந் நிகழ்வில் பிரதம அதிதியாக Croydon Mayor Hon Bernadette Khan கலந்து கொண்டு பொங்கல் பானையில் அரிசி போட்டு பொங்கலை தொடங்கி வைத்தார், Croydon North பாராளுமன்ற உறுப்பினர் Stev Reed, Croydon Central பாராளுமன்ற உறுப்பினர் Sarah Jones, Sutton and Cheam பாராளுமன்ற உறுப்பினர்கள் Paul Sclly, Croydon Broad Green Labour councillor Muhammad Ali, West Thornton Labour Councillor Janet Campbell, Councillor Jamie Audsley Bensom Menar,  Chetharine CLS Chair, தமிழ்த்திரு. பெ. மணியரசன் தமிழ்த்தேசிய பேரியக்கத் தலைவர் தமிழ் நாடு, Dr.Jeyanthan, Devidthayaparan Solicit, Mrs Sujeetha Kirubakaran Solicitor ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இறுதியாக பொங்கல் விழாவிற்காக அச்சிடப்பட்டு விற்பனைசெய்யப்பட்ட நல்வாய்ப்புச் சீட்டிழுப்பு (Raffles) குழுக்கப்பட்டு வெற்றி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டது.

இதன் வெற்றி இலக்கங்களாக 1வது வெற்றி இலக்கமாக 2625, 2வது வெற்றி இலக்கமாக 0505,  3வது வெற்றி இலக்கமாக 6443 இதன் வெற்றி இலக்கங்களை பெற்றுக்கொண்டவர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அலுவலகத்தில் பெப்ரவரி மாதம் இறுதிக்குள் பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் அறியத்தருகின்றோம்.

இறுதியாக கொடி கையேந்தலுடன் உறுதிமொழி ஏற்புடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
« PREV
NEXT »

No comments