Latest News

June 26, 2018

மாணவி படுகொலையைக் கண்டித்து சுழிபுரத்தில் ஆர்ப்பாட்டம்
by admin - 0

மாணவி படுகொலையைக் கண்டித்து சுழிபுரத்தில் ஆர்ப்பாட்டம்

 



சுழிபுரத்தில் பாடசாலை மாணவி படுகொலையைக் கண்டித்தும் குற்றவாளிகளை உடன் கைது செய்து தண்டிக்கவேண்டும் என வலியுறுத்தியும் இன்று ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊர்மக்களும் பாடசாலை மாணவர்களும் இணைந்து குறித்த ஆர்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.











சுழிபுரம் – காட்டுப்புலம் அ.த.க பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவி சிவநேஸ்வரன் றெஜினா கொலை செய்யப்பட்ட நிலையில் அப்பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து நேற்று சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

சிறுமியின் கழுத்து நெரிக்கப்பட்ட அடையாளம் கழுத்தில் காணப்படுவதுடன் நெற்றியிலும் காயம் காணப்பட்டிருந்ததுடன் அவரது காதும் அறுக்கப்பட்டிருந்தது.
« PREV
NEXT »

No comments