மன்னாரில் 19வது நாளாக எலும்புக்கூடு அகழ்வு பணிகள் தொடர்கின்றன!
மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் அகழ்வு பணிக்காக திட்டமிட்ட இடங்களில் தொடர்ந்து மனித எலும்புக்கூடுகள் மண்டையோடுகள் தென்படுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
மன்னார் சதொச நிர்மான வேலையின்போது இவ் வருடம் மார்ச் மாதம் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்களைத் தொடர்ந்து நேற்றுடன் 19 வது நாளாக அகழ்வு செய்யப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற அகழ்வு பணியின்போது ஒரு பகுதியினர் குழிக்குள் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளை துப்பரவு செய்து வெளியில் எடுக்கும் பணியிலும்
இன்னொரு சாரார் அகழ்வுக்காக அளவீடு செய்யப்பட்ட இடத்தை அகழ்வு செய்யும் பணியிலும் ஈடுபட்டனர். இப் பணியின்போது தொடர்ந்து மனித மனித எச்சங்கள் தென்படுவதையும் காணக்கூடியதாக இருந்தது.
இன்று பகல் 12.30 மணியளவில் அகழ்வு பணியை இடை நிறுத்தப்பட்டு மீண்டும் திங்கள் கிழமை ஆரம்பிக்கப்பட உள்ளது. மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.ஐ.பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்ற குறித்த அகழ்வு பணியானது சட்டவைத்திய அதிகாரி டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஐபக்ஷ, தலைமையில் களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஐ; சோம தேவ், தடயவியல் நிபுணத்துவ காவல் துறை ஆகியோர் இவ் பணியில் ஈடுபடுவதுடன் காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பிலுள்ள பிரதிநிதிகள் இங்கு சமூகளித்திருந்தனர்.
அத்துடன் இதில் பணி செய்யும் வைத்திய கலாநிதிகள் தொல்பொருள் ஆய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு தங்குவதற்கான சரியான இட வசதிகள் இல்லாதக் குறைகளும், உணவு, போக்குவரத்து வசதிகள் அற்ற நிலைகளும் காணப்படுவதால் இவைகள் சம்பந்தமாக திங்கள்கிழமை பிற்பகல் நீதவான் தலைமையில் கலந்துரையாடப்பட இருப்ப
No comments
Post a Comment