பதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில்
மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள நோர்வேக்கான வெளியுறவு இராஜாங்க செயலாளர் Jens Frolich Holte வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பு கைதடியில் அமைந்துள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று நண்பகல் இடம்பெற்றது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர்,
எமக்கு இடையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று முடிந்துள்ளது. யாழ். மக்களின் நிலை பற்றி கலந்துரையாடியதுடன், எதிர்காலத்தில் எடுக்கவேண்டிய செயற்றிட்டங்கள் குறித்தும் கேட்டறிந்துகொண்டனர்.
மேலும், பதவிக்காலம் நீடிப்பு தொடர்பில் கேள்வி கேட்டபோது,
இதுவரை நான் ஜனாதிபதியிடமோ வேறு யாரிடமோ எனது பதவிக்காலத்தை நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கவில்லை.
ஆனால் மாகாண சபைக்கான ஆயுட்காலம் முடிந்ததும் தேர்தல் நடத்தாமல் இருந்தால் ஆட்சி அதிகாரம் ஆளுநரின் கைகளுக்குச் செல்லும்.
அவ்வாறு சென்றால் மத்திய அரசு தான் நினைத்ததைப் போன்று வடக்கில் வேலை செய்யத் தொடங்கும். ஆகவே ஆயுட்காலம் முடிந்தால் உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். இல்லையென்றால் எமக்கான பதவிக்காலத்தை தேர்தல் நடைபெறும் வரை நீடிக்க வேண்டும் என்றுதான் கூறினேன்.
ஆனால் இதை ஊடகங்கள் வேறு விதமாக வெளிப்படுத்தியுள்ளதால், அமைச்சர் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளார் என்று முதலமைச்சர் பதில் கூறியுள்ளார்.
No comments
Post a Comment