Latest News

June 26, 2018

யாழ்.மாநகரசபையில் இனஅழிப்பு தீர்மானம்!
by admin - 0

இன அழிப்பு தொடர்பில் மனித உரிமை பேரவையினால் தீர்மானிக்கப்பட்ட  30-1 இனை நடைமுறைப்படுத்தாது காலம் தாழ்த்தும் இலங்கை அரசை கண்டித்தும் தற்போது நிறைவேற்றாத நிலையில் இவ்விடயத்தை மனித உரிமை பேரவை குறித்த விடயத்தினை பாதுகாப்புச் சபைக்கு கொண்டுவர வேண்டும் எனவும் யாழ்.மாநகரசபை கோரியுள்ளது.தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினரான வி. மணிவண்ணனால் இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.



யாழ்ப்பாணம் மாநகர சபையின் 5ம் அமர்வின் இரண்டாம் நாள் அமர்வு நேற்று இடம்பெற்றது.இதன்போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இறுதி யுத்தத்துன்போது இடம்பெற்ற இன அழிப்புத் தொடர்பில் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசும் இனங்கி கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் 30-1 தீர்மானத்தினை முன்னெடுக்க இலங்கை அரசு மறுத்து வருகின்றது. எனவே பாதிக்கப்பட்ட எமது மக்களிற்கு நீதி கிடைக்கும் வகையில் குறித்த விடயத்தினை மனித உரிமைப் பேரவையே பாதுகாப்புச் சபைக்கு முன்கொண்டு செல்ல வேண்டும் என்ற தீர்மானத்தினை அகில தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த வி.மணிவண்ணன் முன்மொழிந்திருந்தார்.

இவ்விடயமானது எமது மக்களின் ஒட்டுமொத்த அபிலாசையினையும் ஙிரதிபலிப்பதோடு அனைவரினதும் விருப்பமாகவும் உள்ளது. எனவே இவ் விடயத்திற்கு எவருமே எதிர்ப்பு கூற முடியாது. இருப்பினும் இத்தீர்மானத்தினை இச் சபையில் நிறைவேற்றுவதன் மூலம் அதற்கான வலு உண்டா என்ற நிலையில் இதனை இங்கே எதிர் விவாதம் புரியாமல் இருப்பதே இத் தீர்மானத்திற்கு நாம் வழங்கும் கௌரவம் என முதல்வர் ஆனோல்ட் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இன அழிப்பு தொடர்பில் மனித உரிமை பேரவையினால் தீர்மானிக்கப்பட்ட  30-1 இனை நடைமுறைப்படுத்தாது காலம் தாழ்த்தும் இலங்கை அரசை கண்டித்தும் தற்போது நிறைவேற்றாத நிலையில் இவ்விடயத்தை மனித உரிமை பேரவை குறித்த விடயத்தினை பாதுகாப்புச் சபைக்கு கொண்டுவர வேண்டும் எனவும் யாழ்.மாநகரசபை தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

« PREV
NEXT »

No comments