விடுதலைப் புலிகளின் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் குணாளன் மாஸ்டர் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று சுவிஸ் நாட்டில் நடைபெற்றது.
தென்மராட்சி சாவகச்சேரியை சேர்ந்த குணாளன் மாஸ்டர், சாவகச்சேரி இந்துகல்லூரியில் கல்வி பயின்று பின்னர் 1979 இல் சென்னையில் உள்ள தொழிநுட்ப கல்லூரியில் கல்வி கற்றிருந்தார். சாவகச்சேரியில் உள்ள ரெலிகோணரில் பணிசெய்திருந்த காலத்தில் பொன்னம்மான் மற்றும் கேடில்ஸ் ஆகியோர்களது நட்புடன்
ஆரம்பமாகிய இவரது பயணம்
மிகச்சிறந்த தொழிநுட்பவியலாளனாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்.
நீண்ட போராட்ட வரலாற்று ஆவணங்களை பாதுகாத்த ஒருவரை நாம் இன்று இழந்திருக்கின்றோம். முன்னைய காலங்களில் போராட்டம் சம்பந்தமான வீடியோக் காட்சிகளை இன்றும் பார்க்ககூடியதாக இருக்கும். அந்த வீடியோ படப்பிடிப்பாளர்களில் இவரும் ஒருவர். குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் இறுதிநாள் வீடியோ பதிவினை குணாளன் மாஸ்டர் தான் எடுத்திருந்தார்..
குணாளன் மாஸ்டரும் கண்ணன் மாஸ்டரும் இணைந்து மீண்டும் ஒரு தொழிநுட்ப கண்காட்சி ஒன்றை 2000 ஆம் ஆண்டு ஏற்பாடு செய்திருந்தனர். அந்த கண்காட்சியில் எனக்கும் கணனி பற்றி விளங்கப்படுத்துவதற்கு கண்ணன் மாஸ்டர் பயிற்றுவித்தார். பல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கணனிபற்றி விளங்கப்படுத்தினவர். அது குணாளன் மாஸ்டருக்கு தான் அது சேரும். கணனி என்பது இன்று சாதாரண விடயம். அன்றைய காலத்தைப்பொறுத்தவரை மாணவ சமுதாயதிற்கு கற்பிற்க வேண்டி தொழிநுட்பங்களை குணாளன் மாஸ்டர் சரியாக செய்திருந்தார். இளைய சமுதாயத்திற்கு தொழிநுட்பம் பற்றிய தேவையை எடுத்துச்செல்லவேண்டும் என்ற சமூக அக்கறை கொண்ட குணாளன் மாஸ்டர் செய்த பணிகளுக்காக நான் தலை வணங்கி நிற்கின்றேன். இன்று குணாளன் மாஸ்ரர் இறுதி வீரவணக்கம் இடம்பெற்றது.
No comments
Post a Comment