எங்கே இருந்து ஏவுகணை கொண்டு தாக்கினால், அது சிரியாவின் உள்ளே சென்று ராணுவ நிலைகளை தகர்க்குமோ. அந்த இடத்திற்கு பிரித்தானியாவின் நாசகாரி நீர் மூழகிக் கப்பல் தற்போது சென்றடைந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை நேற்று(11) தெரேசா மே அம்மையார் தனது போர்கால ராணுவ அதிகாரிகளை அழைத்து அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
இது இவ்வாறு இருக்க சிரியா நோக்கி தமது ஏவுகணைகள் பாய உள்ளதாகவும். அதனை சந்திக்கும் நிலை தோன்றியுள்ளதாகவும் டொனால் ரம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை சிரியா மீது ஏவுகணை தாக்குதல் இடம்பெற்றால், அனைத்து ஏவுகணைகளையும் வானில் வைத்தே ரஷ்யா தாக்கி அழிக்கும் என்று ரஷ்ய அதிபர் புட்டின் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். எது எவ்வாறு இருப்பினும் சிரியாவுக்கு ஒரு பாடம் புகட்டவேண்டும் என்று அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் முடிவு எடுத்துவிட்டார்கள்.
ஆனால் ரஷ்யா கண்மூடித்தனமான ஆதரவை சிரியாவுக்கு வழங்கி வருகிறது. இதனால் 3ம் உலகப் போர் மூண்டுவிடும் அபாயம் தற்போது தோன்றியுள்ளது.
No comments
Post a Comment