எச்.ராஜாவை மனநல பரிசோதனைக்கு உட்படுத்தினீர்களா?- உயர்நீதிமன்றம் பரபரப்பு கேள்வி- வீடியோ
சென்னை: எச்.ராஜாவை மனநல பரிசோதனைக்கு உட்படுத்தினீர்களா என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு கேள்வி எழுப்பி இருக்கிறது.
எச்.ராஜா வன்முறையை தூண்டும் வகையில் பேசிக் கொண்டு இருப்பதாக, அம்பத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் அவருக்கு மனநலனில் பாதிப்பு இருக்கலாம் அதனால் மனநல பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்றும் மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், எச்.ராஜாவை மனநல பரிசோதனைக்கு அனுப்புவது குறித்து உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்றது. அவருக்கு மனநலனில் பிரச்சனை இருந்தால் மருத்துவமனைக்கு அனுப்பலாம் என்று கூறி இருந்தார்கள்.
இந்த நிலையில் எச்.ராஜாவை மனநல பரிசோதனைக்கு உட்படுத்தினீர்களா என்று அம்பத்தூர் போலீசிடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது. அவரை மனநல பரிசோதனைக்கு உட்படுத்துவதில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று கேள்வி எழுப்பி இருக்கிறது.
இதில் அம்பத்தூர் போலீசார் விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மார்ச் 28-ம் தேதி வரை அவகாசம் அளித்து வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
No comments
Post a Comment