Latest News

March 19, 2018

தமிழின உணர்வளர் ம.நாடராஜன் அவர்கள் காலமானார்.
by admin - 0

சென்னை: சென்னை மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா கணவரும் தமிழின உணர்வாளருமான ம. நடராஜன் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார். கணவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க சசிகலா பரோலில் வருகிறார்.



தஞ்சாவூர் மாவட்டம் விளாரில் 1942-ம் ஆண்டு பிறந்தவர் நடராஜன். இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் அரசியலுக்கு வந்தவர் நடராஜன்.

பின்னர் அரசு மக்கள் செய்தித் தொடர்புத் துறை அதிகாரியாக பணியாற்றினார். 1975-ம் ஆண்டு சசிகலாவை திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்தை திமுக தலைவர் கருணாநிதி நடத்தி வைத்தார்.

பின் 1980களில் ஜெயலலிதாவுடன் நட்பு ஏற்பட்ட நிலையில் அவருக்கு பின்புலமாக, ஒருகட்டத்தில் ஆலோசகராகவும் இருந்து வந்தார் நடராஜன்.

  • குளோபலில் அட்மிட்

    அண்மையில் அவருக்கு உடநலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை குளோபல் மருத்துவமனையில் கடந்த 16-ந் தேதியன்று தீவிர சிகிச்சைக்காக நடராஜன் அனுமதிக்கப்பட்டார்.

  • அதிகாலை உயிர் பிரிந்தது

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1.35 மணியளவில் நடராஜன் உயிர் பிரிந்தது.

  • உடலுக்கு எம்பாமிங்

    அவரது உடல் எம்பாமிங் செய்வதற்காக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. எம்பாமிங் செய்த பின்னர் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.

  • பரோலில் வருகிறார் சசிகலா

    நடராஜனின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா பரோலில் வருகிறார். நடராஜன் இறப்பு சான்றிதழ் கொடுத்த பின்னர் சசிகலாவுக்கு பரோல் வழங்கப்படும்

« PREV
NEXT »

No comments