பிரபல திரைப்பட நடிகையான ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக துபாயில் காலமானார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்தவர் நடிகை ஸ்ரீதேவி. கடந்த 1967-ஆம் ஆண்டு கந்தன் கருணை படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன இவர் அதன் பின் நடிகர்களான ரஜினி, கமல் போன்ற நடிகர்களுடன் நடித்து தனக்கென்று திரையுலகில் தனி முத்திரை பதித்தார்.
இந்நிலையில் ஸ்ரீதேவி தன் குடும்பத்துடன் துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்தார். அங்கே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.நேற்று இரவு 11.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இந்தத் தகவலை அவருடைய உறவினர் சஞ்சய் உறுதி செய்தார்.
இந்த மரணம் நிகழ்ந்தபோது ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோர் உடனிருந்துள்ளனர்.
ரஜினி, கமல் போன்ற தமிழின் உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தவர் ஸ்ரீதேவி. அவர் நடித்த 16 வயதினிலே முக்கியமானப் படம்.
திருமணத்திற்குப் பிறகு திரைத்துறையை விட்டு விலகிய அவர், சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற படத்தின் மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி ஆனார். அவருடைய மரணம் திரையுலகினருக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments
Post a Comment