உலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் துணிகர போர்ச்சூழல் ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையாரின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.
எமது மக்களின் துயரத்தை உலகத்தின் கண்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய உத்தமமான ஊடகவியலாளரை இழந்துள்ளோம் தன் ஒரு விழியை இழந்தாலும் மறு விழி வெளிச்சத்துடன் உலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் மேரி கொல்வின் அம்மையாரின் 6 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் மேரி கொல்வின் அம்மையாருக்கு தலைகள் சாய்த்து வீரவணக்கம் செலுத்துகிறோம். மரியாதைக்குரிய மேரி கொல்வின் அவர்களே எமது தேசத்தின் ஆன்மாவில் உங்கள் பெயர் என்றென்றும் நிலைத்து இருக்கும்.மேரி கொல்வினின் இடது கண்ணை இலங்கை பறித்தது. அவரது உயிரையே காவு வாங்கி விட்டது சிரியா. எங்கெல்லாம் அரசப் படைகளின் தாக்குதலில் அப்பாவிகளின் அபயக் குரல் கேட்கிறதோ... அங்கெல்லாம் தனது இருப்பைப் பதிவு செய்த பத்திரிகையாளர் மேரி கொல்வின்.
தமிழின அழிப்பில் ஐநாவின் பங்கை உலகறிய செய்த நேரடி சாட்சியும் “வெள்ளைக்கொடி” விவகாரத்தின் அனைத்துலக சாட்சியுமான மேரி கொல்வின் அம்மையாரை தமிழினம் இழந்து இன்றுடன்ஆறு வருடங்கள்…
ஐநா உட்பட பலர் தமிழின அழிப்பில் பங்கேற்றதை புலிகளின் தகவல்களினூடாக மற்றும் வேறு பல ஆதாரங்களுடன் அறிந்த தமிழ்ச்சூழலுக்கு வெளியே உள்ள மிகச் சிலரில் ஒருவர் அவர்.
“வெள்ளைக்கொடி” விவகாரம் எனப்படும் போர்க்குற்றத்தின் மிக முக்கியமான ஒரு சாட்சி அவர். அவர் சிரியாவில் கொல்லப்பட்டதை நாம் தமிழின அழிப்பின் ஒரு தொடர்ச்சியாகவே பார்க்க வேண்டும். ஏனென்றால் அவர் அழிக்கப்பட வேண்டிய தேவை ஐநா உட்பட பலருக்கு இருந்தது.
அவரது நினைவு நாளில் – ஜெனிவாவில் தீர்மானம் கொண்டுவரவுள்ள வேளையில் சில முக்கியமான விடயங்களை மட்டும் இங்கு பார்ப்போம். கடைசி நேர யுத்தம், ஐநாவின் அயோக்கியத்தனம், அமெரிக்காவின் நாடகம், இந்தியாவின் நரித்தனம், எமக்குள்ளிருந்தே வேரறுத்த துரோகம் குறித்து எல்லாம் சம்மந்தப்பட்டவர்களால் ஆவணங்களாக தொகுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. என்றாவது ஒரு நாள் எல்லா மர்மங்களுக்கும் விடை கிடைக்கும்.. நாம் தற்போது ஒரு சிலவற்றைப் பார்ப்போம்.
01. புலிகள் கடைசிவரை “சரணடைவு” என்ற பதத்தை பாவிக்கவேயில்லை என்பதற்கு ஒரே சாட்சி மேரி கொல்வின். ஆனால் இத்தனை நெருக்கதல்களை இந்தியா மற்றும் மேற்குலகம் சேர்ந்து கொடுத்து தம்மையும் மக்களையும் அவலத்தில் தள்ளியுள்ளதால் மக்களுக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்விற்கான உத்தரவாதம் தந்தால் நாம் ஆயுதங்களை கீழே போடுகிறோம் என்றே நடேசன் கடைசியில் குறிப்பிட்டதே அதிகாரபூர்வமான பதிவு.
(இடையில் கேபி யினுடாக வெளியிட்ப்பட்ட அறிக்கைகள் எவையும் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்குரியவை அல்ல. அவர் அமெரிக்காவினூடாக சிங்களத்திற்கு விற்கப்பட்ட ஆள் என்று தெரிந்து எல்லேரையும் முள்ளிவாய்க்கால் வரை இழுத்து வருவதற்காக தலைவர் பயன்படுத்திய ஒருவர்தான் கேபி)
மேரி கொல்வின் குறிப்பிடுவதுபோல் ஆயுதங்களை கீழே போடுதல் என்பது சரணடைவுதான். ஆனால் கடைசி நேரத்திலும் வரலாற்றை தெளிவாக எழுதுவதிலேயே குறியாக இருந்தார்கள் புலிகள். ஒரு தவறான வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்ல அவர்கள் தயாராக இல்லை. அதுதான் “சரணடைவு” என்ற பதத்தை தமக்காக பேச வந்த மேரிகொல்வினிடம்கூட பாவிக்க மறுத்தார்கள். மிக முக்கியமான வரலாற்று செய்தி இது.
அதன்படியே தாம் ஆயுதங்களை கிழே போட்டுவிட்டோம் என்று அறிவித்துவிட்டு நம்பியாரின் உறுதிமொழியை மேரிகொல்வினூடாக பெற்றுவிட்டு நிராயுதபாணிகளாக சிங்களப்படைகள் முன் போய் நின்றார்கள்.
“எதிர்பார்த்தபடியே” கொல்லப்பட்டார்கள். ஏனென்றால் எமக்கு தாம் இன்னும் சிறிது நேரத்தில் கொல்லப்படுவோம் என்றே கூறினார்கள். 30 வருடம் போராடிய அவர்களுக்கு தெரியாதா? சிங்களத்தினது “மகாவம்ச” மனநிலை. அவர்களை உயிரோடு விட்டிருந்தால்தான் நாம் இத்தனை காலம் போராடியதில் எங்கோ கோளாறு இருக்க வேண்டும். ஆனால் சிங்களம் நிராயுபாணிகளாக நின்ற புலிகளையும் மக்களையும் கொன்றதனூடாக எமது போராட்டத்தின் நியாயத்தையும் நாம் இவ்வளவு காலம் போராடிய யதார்த்தத்தையும் அன்று உலகெங்கும் பறைசாற்றியதுதான் நடந்த உண்மை.
எனவே புலிகள் தாம் கொல்லப்படுவோம் என்று தெரிந்தும் நிராயுபாணிகளாக சிங்களத்தின் முன்போய் நின்று ஐநாவை அனைத்துலக சமூகத்தை அம்பலப்படுத்தியதுடன் எமது மக்களுக்கு விடுதலையை பெற்றுத்தர வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தை உருவாக்கி மடிந்துபோனதுடன் 3அடுத்த தலைமுறை சளைக்காது போரட வேண்டியது ஏன்?” என்ற செய்தியையும் எழுதியதுதான் அந்த மண்ணில் தோல்வியிலும் அழிவிலும் நின்று புலிகளால் எழுதப்பட்ட வரலாறு.
02. மே 16 இரவு அதாவது 17 அதிகாலை புலிகள் ஆயுதங்களை கீழே போடுவதாக மேரி கொல்வினூடாக ஐநாவிற்கு அறிவித்தவுடன் போர் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் சிங்களம் மே 19 ஐ த்தான் முடிவு நாளாக அறிவித்தது. சில நயவஞ்சக தமிழ் ஊடகங்களும் மே 19 சிறீலங்கா அறிவித்த நாளையே அறிவித்து இனத்திற்கு துரோகம் செய்வதை இன்னும் விடவில்லை. சிங்களம் மே 19 என்று ஏன் அறிவித்ததென்றால் மே 17 அதிகாலைக்கு பிறகுதான் கொல்லப்பட்ட 146679 பேரில் முக்கால்வாசி பேரை கொன்றொழித்தது சிங்களம். அப்போதுதானே போரில் கொன்றதாக கணக்கு காட்டலாம்.
ஆனால் தற்போது அந்த விடயத்திலும் நாறிவிட்டது சிறிலங்கா. ஏனென்றால் மே 19 மதியம் போர் முடிந்துவிட்டதாக அறிவித்தது சிங்களம், ஆனால் பாலச்சந்திரன் மதியம் 12.02 க்கு கொல்லப்பட்டதாக புகைப்பட ஆதாரம் சொல்கிறது.
பாலச்சந்திரன் விடயத்தில் மகிந்த சகோதரரர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு வந்தேயாக வேண்டும்.
தலைவர் சரணடைந்து கொல்லப்பட்டார் என்று சிலர் பரப்பும் வதந்தியால் குழப்புமுறும் தமிழ் உள்ளங்களுக்காக ஒரு தகவல். மேரி கொல்வினின் வாக்குமூலமும் வெள்ளைக்கொடி விவகாரமுமே போதும் இந்த பொய்களை அம்மபலப்படுத்த..
தலைவர் சரணடைவது என்றால் நடேசன் புலித்தேவன் ஆட்களுக்கு பிறகுதான் நடைபெற வேண்டும். ஏனென்றால் அதுவரை பேச்சுவார்த்தை மேரிகொல்வின் உட்பட பலருடன் நடந்து கொண்டிருந்தது. பெரியளவில் யாருக்கும் தெரியாத ஒரு செய்தியை இங்கு பதிவு செய்கிறோம். நடேசன் ஆட்கள் அங்கு ஆயுதங்களின்றி சென்று கொல்லப்பட்டதை முதலில் வெளி உலகத்திற்கு சொன்னதே தலைவரின் பாதுகாப்பு அணியான ராதாவான்காப்பு படையணி போராளிகள்தான்.. பிற்பாடு எப்படி தலைவர் தன்னை மட்டும் உயிரோடு விடுவார்கள் என்று சரணடையச் சென்றிருப்பார்.? பீலா விடுறதற்கு ஒரு அளவு வேண்டாமா?
மே 17 ம் திகதிகூட தப்புவதற்கு வழியேதுமற்ற ஒரு குறுகிய நிலப்பரப்பிற்குள் நின்று கொண்டுகூட தமது பேச்சிலோ எழுத்திலோ தவறிக்கூட “சரணடைவு” என்ற சொல் வந்துவிடக்கூடாது என்று கவனம் காத்த தலைவர் எப்படி அதை செய்திருப்பார்.
புலித்தேவன் எமக்கு கடைசியாக கூறிய வாசகம் இது” தலைவர் தனது 200 மெய்ப்பாதுகாவலர்களுடன் நந்திக்கடல் களப்பிற்கு அண்மையாக உறுதியுடன் நிற்கிறார். அவர் இந்த உலகத்திற்கு சொல்லவேண்டிய செய்தியை தெளிவாக சொல்லுவார்
நன்றி ஈழம் ரஞ்சன்
No comments
Post a Comment