மதுரை: கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் கமல்ஹாசன் 40 அடி உயர கட்சியைக் கொடியேற்றினார். பின்னர் அவர் கட்சியின் பெயராக மக்கள் நீதி மய்யம் என்பதை அறிவித்தார்.
மேலும் இந்த கட்சிக்கான உயர்மட்ட குழு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். அதில் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் , பத்திரிகையாளர் ராஜநாராயணன், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி மவுரியா, எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், நடிகை ஸ்ரீபிரியா, நாசர் மனைவி கமீலா, அடையாறு மாணவர் நகலகம் சவுரிராஜன், ஆர்.ஆர். சிவராமன் உள்ளிட்டோர் நிர்வாகிகளாக அறிவிக்கப்பட்டனர்.
No comments
Post a Comment