கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை உயர்ஸ்தானிக அதிகாரி பிரியங்கா பெர்ணான்டோ நாடு திரும்பவுள்ளார்.உலகவாழ் தமிழர் தரப்பிடமிருந்து எழுந்த பெரும் எதிர்ப்புக்களை தொடர்ந்து பணி நீக்கம் பின்னர் பணி அமர்த்தல் என குழப்பநிலைகளின் முடிவில் குறித்த அதிகாரி இலங்கைக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் கடந்த சுதந்திர தினத்தன்று பிரித்தானியாவின் இலங்கை தூதரகத்திற்கு முன்னால் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பிரியங்கா பெர்ணான்டோ தமிழர்களின் கழுத்தை அறுப்பேன் என கொலைமிரட்டல் விடுத்தார். இதனை ஒளிப்பதிவு செய்த முன்னாள் போராளியான சபேஸ்ராஜ் சத்தியமூரத்தி அதனை வெளியிட குறித்த இராணுவ அதிகாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க விரைந்து செயற்பட்ட மனித உரிமைகள் சட்டத்தரணி கீத் குலசேகரம் குறித்த காணொளி தொடர்பில் அனைத்துக்கட்ட நகர்வுகளையும் மேற்கொண்டார்.
இதனால் சர்ச்சைக்குரிய காணொளி சர்வதேச ஊடகங்கள் உட்பட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதினையடுத்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் குறித்த அதிகாரி இருநாட்களுக்குள் (6.02.2017)பதவி நீக்கப்பட்டார். எனினும் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரை மீண்டும் பணியில் அமர்த்தி பணிநீக்கத்தை தடுத்தார்.
No comments
Post a Comment