Latest News

January 18, 2018

வைரமுத்துவின் நாக்கிற்கு விலை, இந்துக்கள் கொலை செய்யவேண்டும்! - நயினார் நாகேந்திரன் சர்ச்சைப் பேச்சு
by Editor - 0

வைரமுத்துவின் நாக்கை அறுத்து வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என பாஜக துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் சர்ச்சைக்குரிய விதமாக பேசியுள்ளார்.

ஆண்டாள் குறித்து இழிவாக கட்டுரை எழுதியதாகக் கூறி பலரும் கவிஞர் வைரமுத்துவைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒருபகுதியாக நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஜவகர் திடலில் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் பாஜக மாநில துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், வைரமுத்துவின் நாக்கை அறுத்துக்கொண்டு வந்தால் ரூ.10 லட்சம் பரிசு என்று சொன்னால், காவல்துறையினர் என்மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்வார்கள். ஆனால், ஆண்டாளை இழிவாகப் பேசிய வைரமுத்துவின் மீது எவ்விதமான நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை எனக்கூறினார். 

மேலும், ஆண்டாளை இழிவாகப் பேசிய வைரமுத்துவின் நாக்கை அறுத்துக்கொண்டு வந்தால், ரூ.10 கோடி தயாராக இருக்கிறேன் எனக்கூறிய அவர், இனி இந்துக்கள் குறித்து இழிவாகப் பேசுபவர்களைக் கொலை செய்ய இந்துக்கள் தயங்கக்கூடாது என சர்ச்சையைக் கிளப்பும் விதமாகப் பேசினார். அதேபோல், வைரமுத்துவிற்குப் பின்னால் திமுக செயல்படுகிறது என்றும், ஆர்.கே.நகர் தோல்வியை மறைக்க திமுக இவ்வாறு செய்வதாக அவர் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments