நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமர்வு - 2018 கனடாவில்
தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை எனும் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பின் சனாநாயக வடிவமாக விளங்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு கனடாவில் கூடுகின்றது.
19ம் நாள் முதல் 21ம் நாள் வரை ரொறன்ரோவில் Aaniin community centre, 5665. 14th Ave. ( Between Middlefield and Vanni st )Markham, On L3S 3K இடம்பெற இருக்கின்ற இந்த நேரடி அரவை அமர்வில் ஒவ்வொரு நாடுகளில் இருந்தும் அரசவை உறுப்பினர் நேரடியாக பங்கெடுக்கின்றனர்.
மேற்சபை உறுப்பினர்கள், மதியுரைக்குழுவினர் என பல வள அறிஞர்களும் அமர்வில் பங்கெடுப்பதோடு, அமைச்சர்களின் செயலறிக்கைகள், கருத்துரைகள், விவாதங்கள் என இந்த அமர்வு விரிவாக இடம்பெற இருக்கின்றது.தமிழர் தேசத்தின் மீது சிறிலங்கா திணித்துள்ள உள்ளாட்சித் தேர்தலும் தமிழர் விடுதலைப் போராட்டமும் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடு குறித்த ஒரு விமர்சன அரங்கும் இந்த அமர்வில் பிரதானமாக விவாதிக்கப்பட இருக்கின்றது.
19ம் திகதி இடம்பெற இருக்கின்ற அமர்வில் அங்குராப்பண நிகழ்வில் பங்கெடுக்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நா.தமிழீழ அரசாங்கத்தின் கனடாப்பணிமனை, 21ம் திகதியன்று பொதுக்கூட்டம் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்துள்ளது.
No comments
Post a Comment