மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதி தப்பிச்சென்றதாக ஒரு செய்தியோடு ஆரம்பிக்கின்றது இந்தப்பாடல்.தமிழர்களின் கலாச்சாரமான “கற்பை” கருவாகக்கொண்டு, நாட்டில் அரங்கேறும் பல தரப்பட்ட சீர்கேடுகளை இந்தப்பாடல் வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றது.
பலரது உள்ளத்தை உலுக்கிப்பதற வைத்த பாடசாலை மாணவியைக் கடத்திக் கற்பழித்துக் கொலை செய்த கொடூர சம்பவத்தின் சூத்திரதாரிக்குத்துணை போன அரசியல் மந்தி(ரி) களின் முகத்திரை இந்தப்பாடல் மூலம் நன்கு கிழித்துத் தொங்கவிடப்பட்டதுடன், மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்னரும் அதாவது எதிர்காலத்தில் மீண்டும் தப்பிக்க எத்தனித்தால் என்ன ஆகும் என்பதனை கன கச்சிதமாக பாடலுடன் பாடலாய் நெற்றிப்பொட்டில் சுடுவதைப்போன்று வெளிப்படுத்தியிருக்கின்றது.
“கற்பு” என்பது அழிக்கப்பட்டாலும் சரி அது இழக்கப்பட்டாலும் சரி தமிழினமே அழிந்து விடும் என்ற முதல் ஆரம்ப வரிகளே பாடலுக்கு மகுடம்.
மரண தண்டனைக்கைதியாக நடித்திருப்பவரின் இயல்பான நடிப்பைப்பாராட்டியே ஆக வேண்டும். கதைக்கருவிற்கேற்ற அசத்தல் இசையும் பாடல் வரிகளும் விறு விறுப்பானவை. பல நாள் கடின உழைப்பில் படைக்கப்பட்ட பாடல் என்பது கண்கூடாகத்தெரிகின்றது.பாடலின் இரண்டாவது பகுதியாக காதல் என்னும் போர்வையில் இருவரை ஏமாற்றுகின்றாள் ஒரு பெண். அவளுக்கும் தப்பிச்சென்ற மரண தண்டனைக்கைதிக்கும் ஒரே முடிவினை வழங்குவதாக பாடல் மற்றும் காட்சிகள் மூலம் மிக அருமையாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றது.
“இது இப்பிடித்தான் நாங்கள் அப்பிடித்தான்”
-அரசி நிலவன்
No comments
Post a Comment