Latest News

November 23, 2017

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு
by admin - 0

மாவீரர் தினத்தை முன்னிட்டு இரத்த தான நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.இந்த நிகழ்வு, இன்றைய தினம்(22) காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெற்றுள்ளது.



Edgware community health centre இல் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர் போராளிகள் குடும்ப நல அமைச்சு, விளையாட்டு, சமூகநல அமைச்சுக்கள் போன்றோரின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.



தேசவிடுதலைக்காக விதையான மாவீரர்களை நினைவு கூர்ந்து மிகவும் உணர்வுபூரவமாக இரத்த தான முகாமில் பலர் கலந்து கொண்டனர்.

முள்ளளிவாய்கால் தினம், தியாக திலீபன் நினைவு தினம், மாவீரர் நினைவு வாரத்தில் நடைபெறுகின்ற குருதிகொடை நிகழ்வானது பிரித்தானியா வாழ் தமிழர்களின் ஈழப்பற்றையும், தியாக உணர்வையும் எடுத்து இயம்புவதோடு விடுதலையின் தார்பரியத்தினை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் பரப்புரையாகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது


"பிரித்தானியாவில் 

மாவீரர் தினத்தை முன்னிட்டு மாபெரும் குருதிக் கொடை"


மாவீரர்களின் நினைவையொட்டி மாவீர் வாரத்தில் பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் கார்த்திகை 22ம் திகதி புதன் கிழமை தியாகத்தின் முழு உருவமாய் விளங்கிய எமது மாவீரர்களின் நினைவு நாளினை முன்னிட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டும் சமூக நலத்தின் பிரதி அமைச்சர் திரு. சொக்கலிங்கம் யோகலிங்கம் தலைமையில் மாபெரும் குருதிக் கொடை நிகழ்வு பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டது.


இந்நிகழ்வானது இன்று (22/11/17) காலை 8:30 மணிமுதல் மாலை 5 மணிவரை Edgware Community Hospital, Burnt Oak Broadway, Edgware, HA8 0AD எனும் இடத்தில் மிக உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. இதில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதி நிதிகளான திரு. நிமலன் - மாவீரர் முன்னைநாள் போராளிகள் குடும்ப நலம் பேணல் அமைச்சின் UK பிரதிநிதி, திரு. மணிவண்ணன் - மனித உரிமைகளும் தொகையான கொடுரங்கள் இனஅழிப்புக் கெதிரான செயற் பாடுகளும் அமைச்சர், திரு. நீதிராஜா - நிதித்துறையின் பிரதி அமைச்சர்,  

நா.க.த.அ. செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என 100 ற்கும் அதிகமானோர் இரத்த தானம் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பெரும் எண்ணிக்கையான மக்கள், மற்றும் இளையோர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


எமது இரத்தம் மற்றவர்களது உயிர் காக்கவே என்று எமக்கு உணர்த்திய எம் மாவீரர்களது நினவுகளை மனதில் சுமந்தவாறு நாம் அனைவரும் ஒன்றிணைந்து தமிழீழம் நோக்கி அணிவகுத்துச் செல்வோம்..


கல்லறை மேனியர் கண் திறப்பார்களே கார்த்திகை மாதத்திலே…



விளையாட்டும் சமூக நலமும் அமைச்சு

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்்


Sports and Community Health Ministry

Transnational Government of Tamil Eelam  (TGTE)

www.tgte.org


ஒன்று படுவோம் வென்றெடுப்போம் எம் மாவீரர்களது கனவை...


"தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்"















« PREV
NEXT »

No comments