Latest News

November 15, 2017

கிழக்கில் பரபரப்பு சுனாமி பீதியில் மக்கள் அச்சம்
by admin - 0

தமிழீழ கிழக்கு மாகாணத்திலுள்ள பல கிணறுகள் திடீரென வற்றிப் போனமையினால் மக்கள் பெரும் பீதியடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.சுனாமி அனர்த்தம் ஏற்படவுள்ளதாக அஞ்சிய மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.




மட்டக்களப்பு ஒந்தாச்சிமடம் பகுதியிலும், அம்பாறை மாவட்டம் கல்முனை, பாண்டிருப்பு பகுதியிலும் கிணறுகள் திடீரென வற்றுத் தொடங்கியுள்ளன.

இந்தத் தகவல் பரவத் தொடங்கியதும் பல இடங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

எனினும் கிழக்கு மாகாணத்தில் சுனாமி ஆபத்து இல்லை என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என நிலையத்தின் மாவட்ட பணிப்பாளர் எம்.றியாஸ் தெரிவித்துள்ளார்

« PREV
NEXT »

No comments