Latest News

November 12, 2017

வடக்கு கடல் அலை 5 அடிக்கு உயர்வு-மக்கள் அச்சம்
by admin - 0

யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பகுதியில் கடல் மட்டம் வழமையை விடவும் உயர்ந்தமையினால் மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.யாழ்ப்பாணத்தின் கோப்பாய் மற்றும் முல்லைத்தீவின் சில பகுதிகளில் கடல் மட்டம் வழமையை விடவும் ஐந்து அடி உயரத்திற்கு மேலெழுந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




யாழ். கோப்பாய் பிரதேச பகுதியிலுள்ள நீர் மட்டம் 4.5 அடி உயிரத்திற்கும் முல்லைத்தீவு கடல் மட்டம் 5 அடி உயரத்திற்கும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக சுனாமி அனர்த்தம் ஏற்படலாம் என அந்தப் பகுதி மக்கள் பதற்றம் அடைந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தீடீரென கடல் மட்டம் அதிகரித்துள்ளமையினால் அதனை பார்வையிடுவதற்காக அந்த பகுதி மக்கள் கடலுக்கு அருகில் சென்றுள்ளனர்.

எனினும் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி கொள்ள தேவையில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய உதவி இயக்குனர் பிரதிப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

வடக்கில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக கடல் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

« PREV
NEXT »

No comments