விண்ணிலும் மண்ணிலும் போராடிகடலிலும் கரையிலும் களமாடிவிளைநிலத்துக்காக வித்தாகிப் போனபுனிதர்களை நினைவுகூர்ந்து ஒன்றாக அவர்களுக்கு வணக்கம் செலுத்தும் நாள் நவம்பர் 27. தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணம் செய்தமாவீரர்களுக்கான உயரிய நாள் இது.தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2017 பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்புகுழுவினால் எக்ஸல் மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வின் ஆரம்பமாக பொதுச்சுடரினைதிருமதி ஆனந்திசூரியப்பிரகாசம் ஏற்றிவைத்தார்.பிரித்தானிய தேசிய கொடியினைஇளையோர் அமைப்பு கிரிஷ் சபாபதி ஏற்றி வைத்தார்.தொடர்ந்து தமிழீழ தேசியகொடியினை அனைத்துலக செயலகபொறுப்பாளர் பொ.மகேஸ்வரன் அவர்கள்ஏற்றி வைத்தார்.
ஈகைச்சுடரினை 1992 ம் ஆண்டு வீரச்சாவை தழுவிக்கொண்ட முல்லை கோட்ட சிறப்புப் பொறுப்பாளர் மேயர் செங்கோல் மற்றும் 1989 ம் ஆண்டு வீரச்சாவை தழுவிக்கொண்ட நாட்டுப்பற்றாளர் பொன்னுத்துரை அவர்களின் சகோதரன் பொன்னுத்துரை சுதன் அவர்கள் ஏற்ற சம நேரத்தில்கல்லறைகளுக்கு முன்பாக மாவீரர் குடும்பத்தை சேர்ந்த உறவுகள் அவர் தம்உறவுகளுக்காக சுடரேற்றினார்கள்.
No comments
Post a Comment