இலங்கை முழுவதும் சீரற்ற காலநிலை நிலவி வருவதால் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளன.வடமாகாணத்தின் கடற்பகுதி நேற்று முதல் மிகவும் கொந்தளிப்பு நிலையில் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றையதினம் முல்லைத்தீவு கடற்பகுதி கறுப்பு நிறத்தில் மாற்றமடைந்து வருவதாக, அந்தப் பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான மாற்றம் ஆபத்தான அறிகுறியாக இருக்கலாம் என்ற அச்சம் காரணமாக, கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
கடற்பகுதிக்கு சென்றுள்ள கடற்படையினர் நிலைமை தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை கடந்த 3 கிழமைக்கு முன்னர் முல்லைத்தீவு கடல் மட்டம் 5 அடி உயரத்திற்கு மேலெழுந்ததாக தகவல் வெளியாகியிருந்தன.
எனினும் இதனை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே இது தொடர்பில் விஞ்ஞான ரீதியான தெளிவுகளை மேற்கொள்ள முடியவில்லை என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ஆனாலும் தற்போது நாட்டின் கடற்பகுதி மிகவும் கொந்தளிப்பு நிலையில் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
No comments
Post a Comment