Latest News

September 20, 2017

சர்வதேச விசாரணை மூலம் மட்டுமே தமிழர்களுக்கு தீர்வு சாத்தியம்-கஜேந்திரகுமார்
by admin - 0

ஐநா மனித உரிமைப்பேரவை அமர்வுகளில் கலந்து கொள்ள ஜெனிவா வந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் வழங்கிய பிரத்தியேக செவ்வியில் சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே ஈழத்தமிழர்களுக்கு தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் என வலியுறுத்தியுள்ளார்.


மகிந்தராஜபக்சவின் சீன சார்பு ஆட்சியின் மீதான மேற்குலக நாடுகளின் மற்றும் இந்தியாவின்  அதிருப்தி காரணமாக தமிழர் பிரச்சனையை அடிப்படையாக பயனபடுத்தி அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டதே மனித உரிமைப் பேரவையின் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான தீர்மானம்.இதை விமர்சன கண்ணோட்டத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள்  தமிழ் தேசிய கூட்டமைப்பு பார்த்து செயற்படாமல் கண்ணை மூடிக்கொண்டு விட்டுக் கொடுப்புக்களை ஆதரவு வழங்கியுள்ளது.ஒருபோதும் சிங்கள இனவாத தலைமைகள் உள்ளக பொறிமுறையை செயற்படுத்த பேரினவாத சக்திகள் இடம்கொடுக்காத இதை தற்போதைய சிறீசேன அரசாங்கம் நிரூபித்துவருகின்றது.மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தெருவில் இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.தமிழர்கள் தங்களுக்கு தீர்வினை பெறவேண்டுமெனில் மனித உரிமைப்பேரவையை மட்டும் நம்பியிராமல் ஐநா பாதுகாப்பு சபை நோக்கிய நகர்வுகளுக்கு தயாராக வேண்டுமென தெரிவித்தார்.

« PREV
NEXT »

No comments